3.47 மில்லியன் ட்வீட்களுடன் ட்ரெண்டாகும் அஜித் பிறந்தநாள்!

சமூக வலைதளத்தில் சிறப்பான ஹேஷ்டேகுகளை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்வார்கள் அஜித் ரசிகர்கள்.

By: Published: April 27, 2020, 10:37:09 AM

Thala Ajith Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தனது 49-வது பிறந்தநாளை வரும் மே 1-ம் தேதி கொண்டாடுகிறார்.

தமிழகத்தில் இதுவரை 59 சிறுவர்கள், 51 சிறுமிகளுக்கு கொரோனா: பெற்றோர்களிடம் இருந்து பரவல்

ரசிகர் மன்றத்தைக் கலைத்து விட்ட அஜித், எந்தவொரு சினிமா நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை. ஆனால், வருடந்தோறும் அவருடைய பிறந்த நாளை அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். குறிப்பாக இணைய ரசிகர்களின் கொண்டாட்டம் 1 மாதத்திற்கு முன்பே தொடங்கிவிடும்.

இதற்காக சமூக வலைதளத்தில் சிறப்பான ஹேஷ்டேகுகளை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்வார்கள் அஜித் ரசிகர்கள். மேலும், பிறந்த நாளுக்காக விஷேசமான போஸ்டர்கள் வடிவமைத்து, இதர பிரபலங்கள் மூலம் வெளியிட்டு அதை அனைத்து அஜித் ரசிகர்களின் காமன் டிபி-யாக இடம்பெறச் செய்வார்கள். இந்நிலையில் இந்த வருடம் கொரோனாவின் தாக்குதலை மனதில் வைத்து, அஜித் பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை என அவரது அலுவலகத்திலிருந்து தகவல் வந்திருக்கிறது. இந்த வேண்டுகோளை ஏற்று, பிரபலங்கள் அருண்விஜய், சாந்தனு, ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்ட பலர், காமன் டிபியை வெளியிடப் போவதில்லை என அறிவித்தனர்.இருப்பினும் முன்னதாக யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட சில பிரபலங்கள், அஜித் பிறந்தநாள் காமன் டிபி-யை வெளியிட்டனர்.

கொரோனாவுக்கு எதிரான போர் : பணிக்கு திரும்பிய இங்கிலாந்து பிரதமர்!

இருப்பினும் #ThalaAJITHBdayGalaCDP என்ற ஹேஷ் டேக்கில் அஜித் பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளனர், அவரது ரசிகர்கள். தற்போது வரை இந்த ஹேஷ் டேக்கில் 3.47 மில்லியன் ட்வீட்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Thala ajith birthday fans celebration twitter trending

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X