’அவங்கள சும்மா விடப்போறது இல்ல’ – அஜித் தரப்பில் வெளியான அறிக்கை

சமூக ஊடகத்தில் இணைய அஜித் விரும்பவில்லை எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ajith's legal notice about social media
Ajith's legal notice about social media

Ajith’s Legal Notice : நடிகர் அஜித் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய ஹெச்.வினோத் குமார் இயக்கி வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார்.

உங்கள் வாழ்வை அழகாக, அர்த்தமாக மாற்றிய பெண்களுக்கு என்ன பரிசுப் பொருள் வாங்கலாம்?

இதற்கிடையே நடிகர் அஜித்குமார், சமூக வலைதளங்களில் இணைவதாக நேற்று சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் அஜித்தின் கையெழுத்தும் இடம்பெற்றிருந்தது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இந்நிலையில் அந்த அறிக்கையை அஜித் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக சட்டபூர்வமான அறிக்கையையையும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், அஜித் கையொப்பத்துடன் பரவி வரும் அந்த அறிக்கை அதிர்ச்சியளிப்பதாகவும், அவருக்கு எந்த சமூக ஊடகத்திலும் கணக்கு இல்லை எனவும், அவர் எந்த ரசிகர் பக்கத்தையும் ஆதரிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகத்தில் இணைய அஜித் விரும்பவில்லை எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு கையெழுத்தை மோசடி செய்தவர்களை கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘என்னை மிரட்டியவர்கள், ஆர்.எஸ்.எஸ். ஆட்களா?’ பால பிரஜாதிபதி அடிகளார் பேட்டி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thala ajith legal notice about joining social media platforms

Next Story
1 மாசத்துக்குள்ளயே டைரக்டர் மாற்றமா? என்னாச்சு சித்தி…Chithi 2 serial, radhika sarathkumar, coronavirus lockdown, serial re telecast, sun tv
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com