/tamil-ie/media/media_files/uploads/2019/09/Thala-60-Ajith-Kumar.jpg)
Thala 60 - Ajith Kumar
Ajith Kumar: நடிகர் அஜித் நடித்திருந்த நேர்க்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இந்தியில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்தப் படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ‘ஸீ ஸ்டூடியோஸுடன்’ இணைந்து இதனை தயாரித்திருந்தார். படம் வெளியாக விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தனது அடுத்தப் படத்தையும் அஜித்தை வைத்தே தயாரிக்கிறார் போனி கபூர். ஆக்ஷன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் இதனை ஹெச்.வினோத்தே இயக்குகிறார். படத்தில் அஜித், பைக் ரேஸராகவும், காவல்துறை அதிகாரியாகவும் நடிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அஜித் தனது உடல் எடையயையும் குறைத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தன.
Dashing Thala Ajith anna getting ready for Next????????..
stylish thala on the floor ???????????? #Thala60#ThalaAjithpic.twitter.com/omBfvHZ4TI
— ???????????????????? ???????????????????????? ????????????????????ᴬᴷ60 (@thala_devoteezz) September 10, 2019
தவிர, அஜித்தின் 60-வது படமான இதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அஜித் - ஹெச்.வினோத் படத்திற்கான ஃபோட்டோஷூட் தொடங்கியுள்ளது. அங்கு எடுக்கப்பட்ட ஒரு ஃபோட்டோவும் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
பிக்பாஸ் இல்லத்தில் எனக்கு நடந்த கொடுமை: ஜாங்கிரி மதுமிதா பேட்டி
இந்தப் படத்தைப் பார்த்த அஜித் ரசிகர்கள், ’என்னது தல 60 ஆரம்பமாகிடுச்சா?’ என ஆச்சர்யத்துடன் அதனைப் பகிர்ந்து வருகிறார்கள். அதில், காக்கி பேண்ட், வெள்ளை டி சர்ட், கண்களில் கூலர்ஸ் என்று, அச்சு அசல் போலீஸ் அதிகாரி போல தோற்றமளிக்கிறார் அஜித்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.