இந்தியாவின் முதல் ரேஸ் சாம்பியனுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்! - வீடியோ உள்ளே!

Thala Ajith: தல 60’ படத்தில் அஜித்தின் ஸ்டைலிஷான தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது!

Thala Ajith: தல 60’ படத்தில் அஜித்தின் ஸ்டைலிஷான தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thala 60 - Ajith

அலிஷா அப்துல்லாவுடன் அஜித்

Thala Ajith's Wishes for Race Champion Alisha Abdullah: நடிகர் அஜித் ’நேர் கொண்ட பார்வை’ படத்தைத் தொடந்து, தனது 60-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

Advertisment

நடிப்பைத் தவிர, ரேஸ் ஓட்டுவது, ஃபோட்டோகிராஃபி, பிரியாணி சமைப்பது, ஆளில்லா விமானம் தயாரிப்பது, துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் அதிக நாட்டமுடையவர் அஜித். இவரின் பல படங்களில் இடம்பெற்றுள்ள பைக் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் டூப் இல்லாமல் அஜித்தே செய்வார். அதனால் படத்தில் ஒரு காட்சியாவது அஜித் பைக் ஸ்டண்ட் செய்ய மாட்டாரா என்று எதிர்பார்ப்பார்கள். இவ்வளவு ஏன், பிங்க் ரீமேக்கான நேர் கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்ததால் தான் பைக் ஸ்டண்ட் வைக்கப்பட்டது. அதோடு ‘தல 60’ படத்தில், அஜித் கார் ரேஸராக நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Advertisment
Advertisements

Thala 60, ajith அஜித்

இந்நிலையில், இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸரான அலிஷா அப்துல்லா, அஜித் தன்னை வாழ்த்திய தருணத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், “5 வருடங்களுக்கு முன் அஜித் என்னுடைய சூப்பர் பைக்கை ஓட்டி, என்னை வாழ்த்தினார்” என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இடம்பெற்றுள்ள வீடியோவில், “ஆல் தி பெஸ்ட். நல்லா பண்ணுங்க. பாதுகாப்பு அவசியம்”  என்று அஜித் கூறியுள்ளார்.

தவிர, ’தல 60’ படத்தில் அஜித்தின் ஸ்டைலிஷான தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது!

Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: