அடேங்கப்பா… சர்கார் சாதனையை முறியடித்த விஸ்வாசம்…

தளபதி விஜய் நடித்து வசூலை ஈட்டிய சர்கார் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி தல அஜித்தின் விஸ்வாசம் படம் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி ஏ.ஆர் முருகதாஸ் – விஜய் கூட்டணியில் வெளியான படம் சர்கார். இப்படம் பல சர்ச்சைக் காட்சிகள்,…

By: February 1, 2019, 6:28:41 PM

தளபதி விஜய் நடித்து வசூலை ஈட்டிய சர்கார் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி தல அஜித்தின் விஸ்வாசம் படம் புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி ஏ.ஆர் முருகதாஸ் – விஜய் கூட்டணியில் வெளியான படம் சர்கார். இப்படம் பல சர்ச்சைக் காட்சிகள், வசனங்கள் மற்றும் கோமலவள்ளி பெயர் போன்ற விஷயங்கள் பெரும் பிரச்சனையை சந்தித்தது. இலவச பொருட்களை தவறாக சித்தரித்துள்ளதாக அதிமுகவினரும் போராட்டம் நடத்தினர்.

சர்கார் வசூலை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம்

ஏற்கனவே ஏற்பட்டிருந்த சர்ச்சை போக, அதிமுகவினர் போராட்டத்தால் இப்படம் இரண்டு நாட்கள் திரையிடப்படாமல், மீண்டும் தணிக்கைக்கு சென்று காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே திரையிடப்பட்டது. இதன் பின்னர் ஆர்வம் அதிகரித்து பொதுமக்கள் அனைவரும் இப்படித்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றனர். இதனால் சர்கார் படத்தின் வசூல் வேறு லெவலுக்கு எகுறியது.

ஆனால் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தல அஜித் மற்றும் சிவா கூட்டணியில் விஸ்வாசம் படம் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியானது. இப்படம் பேட்ட படத்துடன் இணைந்து வெளியான போதிலும், தந்தை – மகள் பாசத்தால் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் மூலம் பேட்ட படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி முந்தியது விஸ்வாசம்.

தற்போது வசூல் குறித்த தகவல்கள் வெளியே வரும் நிலையில், பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர் ரமேஷ் பாலா, சர்கார் படத்தின் வசூலை விஸ்வாசம் முறியடித்துள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதனால் தல ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Thala ajith s viswasam has surpassed sarkar s lifetime gross in tn

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X