scorecardresearch

சினிமா சிப்ஸ்: ‘சிறுத்தை’ கூண்டிலிருந்து தப்பிய அஜீத்?

வினோத்தை தேர்வு செய்து அஜித் நடிக்க ஒப்புக் கொண்டதில் தல ரசிகர்களுக்கும் சந்தோஷமாம்!

Happy Birthday Ajith, Thala Ajith,
Thala Ajith, Actor Ajithkumar

சினிமா உலக சுவாரசியங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்களுக்காக விமர்சகர் திராவிட ஜீவா இங்கே தொகுத்து தருகிறார்.

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் விஸ்வாசம். இதற்கடுத்து அஜித் என்ன படத்தில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு விடை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து 4 படங்களில் இணைந்திருந்த சிறுத்தை சிவாவிடம் இருந்து தற்காலிகமாக பிரிந்து, சதுரங்கவேட்டை வெற்றிப்படத்தை கொடுத்த வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தகவல் உறுதியாகியுள்ளது.

ப‌டத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட தேர்வுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சமீப காலமாக ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்த்திருக்கும் அஜித்துக்கு ஏற்ற மாறுபட்ட ஆக்க்ஷன் கதையை உருவாக்கியிருக்கிறார் வினோத். இந்தக் கதையை கேட்ட உடனே அஜித் ‘ஓகே’ சொல்லிவிட்டார்.

இது கதையுடன் இணைந்த ஆக்க்ஷன் படமாக இருக்கும் என்கிறார்கள். நீண்ட நாளாக அஜித் ரசிகர்கள் அவரது படத்தை எதிர்பார்த்ததைவிட சிறுத்தை சிவாவின் கூண்டிலிருந்து அஜித் எப்போ வெளியே வருவார் என்றே காத்திருந்ததாக ஒரு தகவல் உண்டு. அந்த வகையில் வினோத்தை தேர்வு செய்து அஜித் நடிக்க ஒப்புக் கொண்டதில் தல ரசிகர்களுக்கும் சந்தோஷமாம்!

தேர்தலுக்கு காத்திருக்கும் பாக்கியராஜ்

சர்கார் பட கதை விவகாரத்தில் கதாசிரியர் வருண் என்னும் சாமானிய எழுத்தாளருக்கு துணையாக நின்றார் இயக்குனர் பாக்கியராஜ். சினிமாவில் பல‌ தரப்பில் இருந்தெல்லாம் வந்த அழுத்தங்களை கண்டுகொள்ளாமல் நியாயத்தின் பக்கம் இருந்தார். எனவே சினிமா எழுத்தாளர் சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் பல ஆயிரம் சாதாரண வசதி குறைவான எழுத்தாளர்கள் மத்தியில் நல்ல பெயர் பாக்கியராஜுக்கு கிடைத்திருக்கிறது. சில நடுநிலை இயக்குநர்கள் மத்தியிலும் பாக்கியராஜுக்கு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

நேர்மையாக நடந்துகொண்ட பாக்கியராஜுக்கு நேர்ந்த சில நெருடல்களால் தனது எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். மீண்டும் அந்த சங்கத்திற்கான தேர்தலில் போட்டியிட்டு வெல்லலாம் என்றும் நினைக்கிறார். அதனால் சங்கத்திற்காண தேர்தலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றார்.
அடிப்படையில் நல்ல கதைக்கும் திரைக்கதைக்கும் புகழ்பெற்ற திகழும் பாக்கியராஜ் போன்றவர்களுக்கு அப்பதவியும் பொருந்தும் தானே

வெங்கட் பிரபுவின் பார்ட்டி!

சினிமா உலகில் ‘பார்ட்டி’கள் சகஜம்! ஆனால் இதில் ‘ஃபேமஸ்’ இயக்குனர் வெங்கட் பிரபு. கடந்த 10 வருடங்களாக இவரது டீம், பார்ட்டிகளில் சங்கமிப்பது சகஜம்.

இந்த குரூப்பில் அவ்வபோது சில விலகல்களும், சேர்க்கைகளும் இருக்கலாம். எனினும் அந்த டீமே அவரது படத்திலும் டெக்னீஷியன்களாகவும், நடிகர், நடிகைகளாகவும் தொடருவதும் வாடிக்கை.

இந்தச் சூழலில் வெங்கட்பிரபு தற்போது இயக்கியிருக்கும் புதுப் படத்திற்கும் பார்ட்டி என்றே பெயர் வைத்திருப்பதுதான் சுவாரசியம்! என்னதான் பார்ட்டி மோகமோ போங்க!

ஹன்சிகாவுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு இல்லை?

பாமக.வின் சினிமா எதிர்ப்பு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் வெளிவந்த போது படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருக்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தன்னுடைய எல்லைக்குட்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தியது.

அதற்கு பின்னரும் முன்ணனி நடிகர்கள் தங்கள் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை பெரும்பாலும் தவிர்க்கவே இல்லை. நீண்ட நாளுக்குப்பிறகு சமீபத்தில் சர்கார் படத்திற்கும் எதிர்ப்பை பாமக பதிவு செய்தது. ஆனாலும் ரஜினிக்கு எதிராக போராடியது போலில்லாமல், மைல்டாக எதிர்ப்பு தெரிவித்தது பாமக.

தற்போது நடிகை ஹன்சிகா நடிக்கும் படத்தின் லுக் வெளியானது. அதில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இருப்பதால் தற்போதும் தங்களது எதிர்ப்பை பதிவிட்டுள்ளனர். ஆனால் சர்க்கார் அளவிற்கு அந்த எதிர்ப்பு இல்லை.

இதுபோன்ற காட்சிகளுக்கு எதிராக போராடுவதும் எதிர்ப்பதும் நியாயமானதே. ஆனால் அந்த எதிர்ப்பும் ரஜினிக்கு எதிராக இருந்ததுபோல மற்ற நடிகர், நடிகைகளுக்கு இல்லை என்பதை எப்படி எடுத்துக் கொள்வது? ரஜினி அளவுக்கு விஜய் வொர்த் இல்லை; விஜய் அளவுக்கு ஹன்சிகா வொர்த் இல்லை என எடுத்துக் கொள்ளலாமா மருத்துவர் அய்யா அவர்களே!

என்ன ஆச்சு மும்தாஜுக்கு?

டி.ராஜேந்தரால் அறிமுகம் செய்யப்பட்டு கதாநாயகியாகவும் கவர்ச்சி நாயகியாகவும் வலம் வந்தவர் நடிகை மும்தாஜ். அதன்பிறகு சிறிதுகாலம் சினிமாவிலிருந்து மட்டுமல்ல, சினிமா தொடர்பான விஷயங்களில் இருந்தும் ஒதுங்கி இருந்தார்.

தொலைக்காட்சியின் நடனப் போட்டியில் நடுவராக கலந்துகொண்டிருந்தார். அதன் பிறகு யாராலும் தொடர்புகொள்ள முடியாத நடிகைகள் பட்டியலில் இணைந்தார். அவரை தேடிப்பிடித்து பிக்பாஸுக்கு அழைத்துவந்தனர் பிக்பாஸ் குழுவினர். பிக்பாஸ் முடிந்தவுடன் மீண்டும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டதாக சினிமா உலகினர் பரபரக்கின்றனர். என்னதான் ஆச்சு மும்தாஜுக்கு ?

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Thala ajith siruthai siva viswasam

Best of Express