Advertisment

ரஜினிக்கு ஃபோன் செய்த அஜித்: என்ன காரணம் தெரியுமா?

அஜித், ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையிலிருந்து பல ரகசியங்களை தெரிந்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

author-image
WebDesk
New Update
Ajith's Special Phone call to Rajinikanth

ரஜினிகாந்த் - அஜித்

அஜித் தனது நடிப்பால் பல ‘விஸ்வாசமான’ ரசிகர்களைப் பெற்றுள்ளார்.  அவரின் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும், ரசிகர்கள் அதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். ஃப்ரெண்ட்லி நடிகரான அஜித்,  ஏராளமான நண்பர்களை சம்பாதித்துள்ளார். ஆனால் அவர் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கிறார். இப்போதைய தகவல் என்னவென்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு, அஜித் ஒரு ஸ்பெஷல் ஃபோன் கால் செய்துள்ளார்.

Advertisment

2 பொருள் போதும்… வீட்லயே யம்மியான மேங்கோ ஜாம் ரெடி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சினிமாவில் 45 ஆண்டுகளை நிறைவு செய்தார். ரசிகர்கள் இந்த சிறப்பு நிகழ்வை சமூக ஊடகங்களில் வெறித்தனமாக கொண்டாடினார்கள். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்ததோடு, அவர்கள் இல்லாமல் தான்  இல்லை என்று கூறினார். இதற்கிடையே அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஃபாலோயர்.  2007 ஆம் ஆண்டில் ரஜினியின் 'பில்லா' படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார். இப்போது, ஒரு ஆன்லைன் போர்ட்டலில் அஜித், ரஜினிகாந்தை ஃபோனில் அழைத்து, சினிமாவில் அவரது மகத்தான பயணத்துக்காக  நட்சத்திரத்தை வாழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நட்சத்திரங்களும் தொலைபேசியில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் உரையாடியுள்ளதாகவும், அப்போது அஜித், ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையிலிருந்து பல ரகசியங்களை தெரிந்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

டேஸ்டி… ஈஸி ரவை கேக்.. குழந்தைகளின் ஃபேவரிட்!

அஜித்தின் 'விஸ்வாசம்' ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படத்துடன் 2029 பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களால் நன்கு கொண்டாடப்பட்டன. இப்போது, ரஜினிகாந்த் ’விஸ்வாசம்’ பட இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் 'அண்ணத்த' படத்தில் இணைந்திருக்கிறார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema Rajinikanth Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment