Advertisment

இவ்வளவு பெரிய குடும்பத்தின் மருமகளா நயன்தாரா? விஸ்வாசம் ஸ்டில்ஸ் ரிலீஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viswasam movie stills, நயன்தாரா

Viswasam movie stills

Viswasam movie stills : சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஸ்டில்ஸ் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

Viswasam movie stills

பில்லா படத்திற்கு பிறகு நடிகர் அஜீத் நடிக்கும் இரட்டை வேடப் படம் தான் விஸ்வாசம். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. தல அஜித் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இரண்டு அஜித்களுக்கு ஜோடியாக காலா ஈஸ்வரி மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர்.

கழுத்துல தாலி... நெற்றியில் குங்குமம்... சின்ன தல மனைவியாக நயன்தாரா... புகைப்படம் ரிலீஸ்

இவர்களுடன் இணைந்து, விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த 25ம் தேதி வெளியானது. இந்த போஸ்டர், 13 மணி நேரத்திலேயே சுமார் 280 லைக்குகள் பெற்று பிற படங்களின் சாதனைகளையெல்லாம் முறியடித்தது.

Viswasam movie stills : விஸ்வாசம் ஸ்டில்ஸ்

இதனை தொடர்ந்து நேற்று இப்படத்தில் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது ட்விட்டர் பக்கத்தில் விஸ்வாசம் படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில், மங்களகரமாக தோன்றும் நயன், அஜித்துடன் ஜோடியாக இணைந்து நிற்கிறார். இந்த புகைப்படம் வேகமாக இணையத்தில் பரவியது.

Viswasam movie stills

இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சர்பிரைஸ் கொடுத்துள்ளது விஸ்வாசம் குழு. தல படம் என்றாலே வியாழக்கிழமை தானே ஸ்பெஷல். இன்று அதே போல் தான். விஸ்வாசம் படத்தின் புதிய ஸ்டில்ஸ் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Viswasam movie stills

இன்று வெளியான இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. நேற்று புடவை கெட் அப்பில் இருந்த நயன், இன்றைய ஸ்டில்ஸில் சுடிதாரில் இருக்கிறார். ஆனால் ரசிகர்களோ இரண்டு கெட்டப்பில் இருக்கும் நயன்தாராவை ரசித்து வருகின்றனர்.

Viswasam movie stills

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டிரெய்லருக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Viswasam movie stills

Tamil Cinema Thala Ajith Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment