Thala Ajiths house wall:
திருவான்மியூரில் இருந்து தற்போது சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் அஜித், தனது வீட்டில் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார்.
இவரது பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டின் சுவர் இடிக்கப்பட்டுள்ளது.
அவரது மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள பல வீடுகளின் சுற்றுச்சுவர்களும் இடிக்கப்பட்டுள்ளன. இதனால் அஜித் வீட்டில் உள்ளவர்கள் வீட்டில் இருந்து நேரடியாக கடற்கரைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
நடிகர் அஜித் 2017 ஆம் ஆண்டு தனது இல்லத்தில் சில நவீன மாற்றங்களை கொண்டு வருவதற்காக தனது வீட்டை புதுப்பித்துள்ளார்.
அதற்கு முன்னதாக குடும்பத்தினருடன் அவர் வாடகை வீட்டில் இருந்தார். தற்போது அவரது வீடு டிஜி்டடல்மயமாக்கப்பட்டு உள்ளது.
அவர் தனது மகன் விளையாடுவதற்கு ஒரு பிரத்யேக அறையையும், நடனம் மற்றும் பலவற்றைக் கற்க தனி இடத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.
மேலும் அஜித் குமார் வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவரின் நடிப்பில் ஜனவரியில் துணிவு என்ற படம் வெளியாகி இருந்தது.
தொடர்ந்து தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துவருகிறார். அண்மையில் இவரின் தந்தை சுப்பிரமணி வயது முதிர்வு காரணமாக தனது 85வது வயதில் மரணித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“