/tamil-ie/media/media_files/uploads/2018/11/d572.jpg)
Thalaivar 167 photos leaked online
Thalaivar 167: நடிகர் ரஜினிகாந்த் தனது 167 படத்தை துவங்கிவிட்டார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
’தலைவர் 167’ என்றழைக்கப்படும் இந்தப் படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிகிறார்.
இதன் படபிடிப்பு வரும் 10-ம் தேதி மும்பையில் துவங்குகிறது. இதற்கிடையே கடந்த சனிக்கிழமை இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு சென்னையில் ஃபோட்டோ ஷூட் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரகசியமாக நடத்தப்பட்ட இந்த ஷூட்டில் போலீஸ் கமிஷ்னர் உடை அணிந்திருந்தார் ரஜினி.
#Rajinikanth#Thalaivar167 look leaked #Thalaivar167pic.twitter.com/W085vds4yn
— MOVIE MACHA (@MovieMacha_) April 5, 2019
ஆனால் இதனை அங்கிருந்தவர்கள் யாரோ படம் பிடித்து இணையத்தில் லீக் செய்து விட்டனர்.
இதனால் முருகதாஸ் உள்ளிட்ட குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.