ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ரிலீசாகவிருக்கும் நிலையில், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினியின் அடுத்த பட பூஜை இன்று நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், தற்போதைக்கு ‘தலைவர் 168’ என்று அழைக்கப்படுகிறது.
#Thalaivar168Poojai #Thalaivar168 pic.twitter.com/bo3jHzOnvi
— Sun Pictures (@sunpictures) December 11, 2019
ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினியுடன் நடிக்க, கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி இருவரும் ரஜினியுடன் முதன்முறையாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராகப் பணியாற்றவுள்ளார். டி.இமான் இசையமைக்க, விவேகா பாடல்கள் எழுதுகிறார்.
நாளை (டிசம்பர் 12) ரஜினியின் பிறந்த நாள். அதைக் கொண்டாட ரசிகர்கள் தயாராகியுள்ள நிலையில், ‘தலைவர் 168’ படத்தின் பூஜையும் சேர்ந்து அவர்களை இரட்டிப்பு மகிழ்ச்சில் ஆழ்த்தியுள்ளது.
இப்படத்தின் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், ரஜினியின் ஜோடி மீனாவா, குஷ்புவா என்பது சஸ்பென்ஸாக உள்ளது.
இவர்கள் இருவரும் ரஜினியுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இந்நிலையில், பழைய நிகழ்ச்சி ஒன்றில், மீனாவும் குஷ்புவும் ரஜினிக்காக சண்டைபோடும் வீடியோ வைரலாகி வருகிறது.
ரஜினி யார் கேங் என்று இருவரும் செல்ல சண்டை போட்டுக்கொண்டனர். மீனா அவர் எங்களின் கேங் என்றும், குஷ்பு ரஜினி தங்களின் கேங் என்றும் சண்டை போட்டுக் கொண்டனர்.
????????????#khushbu and #Meena Both on #Thalaivar168 ????????????@sunpictures #Thalaivar #Rajinikanth @directorsiva
Caste well suited for Pakka Village Film ♥️♥️ pic.twitter.com/CNDvdV5Yyx— Rãjíñì[email protected]ñ_Págé????ᴰᴬᴿᴮᴬᴿ (@rajinifanpage12) December 10, 2019
மேலும், 80ஸ்தான் தமிழ் சினிமாவின் கோடல்டன் பீரியட் என்ற குஷ்பூ, நீங்கள் எல்லாம் குழந்தைகள், ஜூனியர்ஸ் என்றும் மீனாவை கலாய்க்கிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.