Thalaivar 168 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்திற்கு யார் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடம் மேலோங்கி இருந்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் தலைவர் 168 படத்திற்கு இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் சன் பிக்சர்ஸின் முந்தைய தயாரிப்பான ’நம்ம வீட்டு பிள்ளை’ படத்துக்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
We are happy to announce that for the first time @immancomposer will be the music director for Superstar @rajinikanth’s movie #Thalaivar168@directorsiva#ImmanForThalaivar168 pic.twitter.com/vuvAMzw4Cg
— Sun Pictures (@sunpictures) November 13, 2019
“தலைவர் 168” க்கு இசையமைப்பது மகத்தான மகிழ்ச்சியளிக்கிறது! கடவுளின் அற்புதமான கிருபையுடனும், உங்கள் எல்லோரின் ஆசீர்வாதங்களுடனும் எனது சிறப்பான இசையை தருவேன். சன் பிக்சர்ஸ் மற்றும் எனது அன்பான இயக்குனர் சிவாவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று இது குறித்து ட்விட்டரில் தெரிவித்திருந்தார் டி.இமான்.
‘தலைவர் 168’ திரைப்படத்தின் படபிடிப்பு சில மாதங்களில் தொடங்க உள்ளது. இதற்கிடையில், இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்தப் படம் பொங்கல் வெளியீடாக, 2020-ல் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் இதனை தயாரித்துள்ளது.