ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கேரளாவில் ஒரு பகுதி படப்பிடிப்பை முடித்த படக்குழு, இப்போது திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றுள்ளது.
அங்கு ஒரு அதிரடி காட்சியை, படக்குழு படமாக்கி வருகிறது.
இதற்காக ரஜினி 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருநெல்வேலிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் ரஜினி வீடியோ ஒன்று இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.
முன்னதாக 1977-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் இதே ஊருக்கு வந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும், சிவகுமார் ஆன்டி ஹீரோவாகவும் நடித்திருந்தனர்.
'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களுக்கு பணகுடியில் நடைபெறுகிறது, அடுத்ததாக கன்னியாகுமரிக்கு படக்குழு செல்லவுள்ளது. இதற்கிடையில் படப்பிடிப்பில் ரஜினிகாந்தை சந்திக்க கிராமத்தில் உள்ள ரசிகர்கள் அதிக அளவில் கூடி வருகின்றனர்.
'தலைவர் 170' படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார், மேலும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திக் சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் முக்கிய துணை நடிகர்கள் விரைவில் கன்னியாகுமரி படப்பிடிப்பின் போது இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“