இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் தலைவி என்ற பெயரில் உருவாக உள்ளது.
மறைந்த முன்னாள் முதல் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க பல இயக்குநர்களும் நீ நான் என்று போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே அறிமுக இயக்குநர் பிரியதர்ஷினி நித்யா மேனனை வைத்து தி ஐயர்ன் லேடி என்று ஜெயலலிதாவின் படத்தை எடுத்து வருகிறார்.
மற்றொரு பக்கம், பிரபல இயக்குநர் கௌதம் மேனன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரீஸாக எடுத்து வருகிறார். இது போதாது என்று லிங்குசாமியும் சசிகலாவை முக்கிய கதாப்பாத்திரமாக வைத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருக்கிறார். இதற்கிடையே தாமும் இந்த வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க இருப்பதாக இயக்குநர் ஏ.எல். விஜய் ஏற்கனவே கூறியிருந்தார்.
தலைவி பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம்
இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் பற்ரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கைப் படத்தின் தலைப்பு `தலைவி' என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
February 2019
இப்படத்துக்கு 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக பணிபுரியவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். மதன் கார்க்கி பாடல்கள் எழுத, விப்ரி மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. ஜெயலலிதா வாழ்க்கைப்படம் எடுப்பதற்காக அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது.
February 2019
நடிகர் விஜய்யை வைத்து தலைவா என்ற படத்தை எடுத்த ஏ.எல். விஜய் தற்போது தலைவி என்ற படத்தை எடுக்க இருக்கிறார். அந்த படத்தை போலவே இந்த படமும் நிச்சயம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே எழுந்துள்ளது.