ஏ.எல். விஜய் இயக்கத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை, தலைவி எனும் தலைப்பில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். இதில், கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது வாழ்க்கை வரலாறை படமாக இயக்க பலரும் முனைப்பு காட்டினர். அதில் பிரம்மாண்ட பொருட்செலவில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை ஜெயலலிதாவாக நடிக்க வைத்து தலைவி என்ற தலைப்பில் ஏ.எல். விஜய் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தலைவி படம் அடுத்த ஆண்டு ஜூன் 26ம் தேதி திரைக்கு வருகிறது.
முன்னாள் முதல்வரின் ஜெயலலிதாவின் ஒரிஜினல் போட்டோவில், போட்டோஷாப்பின் மூலம், கங்கனா ரனாவத்தின் முகத்தை ஒட்டவைத்து பர்ஸ்ட் லுக் உருவாக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் நடிகையாக இருந்தே ஜெயலலிதா, பின்னாளில், அரசியல் உலகில் அசைக்க முடியாத சக்தியாக உயர்ந்தார்.
கங்கனா ரனாவத்தை ஜெயலலிதாவாக சித்தரிக்க, படக்குழு பெரும்பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஹாலிவுட் திரையுலகின் முன்னணி ஒப்பனைக்கலைஞரும், கேப்டன் மார்வெல் படத்தில் பங்கேற்றவருமான ஜேசன் கோலின்ஸ் , இந்த படத்தின் ஒப்பனை கலைஞராக பணியாற்றி வருகிறார்.
தலைவி படம் தொடர்பாக, கங்கனா ரனாவத் கூறியதாவது, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற பெண் நட்சத்திரம் ஜெயலலிதா . அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நான் அவரது கேரக்டரில் நடிக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த படத்தில் நடிப்பதற்காக பெருமைப்படுவதாக அவர் கூறினார்.
இந்த படத்துக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில், படத்தை எவ்வித பிரச்னையும் இன்றி வெளியிடும் வகையில், ஜெயலலிதாவின் உறவினர் தீபக் ஜெயக்குமாரிடம் இருந்து தடையில்லா சான்றிதழை படக்குழு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
The legend we know, but the story that is yet to be told!
Presenting #KanganaRanaut, in & as #Thalaivi. A film by #Vijay, arriving in cinemas on 26th June, 2020@KanganaTeam @vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1 @KarmaMediaEnt @TSeries @vibri_media pic.twitter.com/lTLtcq0bsd— Team Kangana Ranaut (@KanganaTeam) November 23, 2019
படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்துரி கூறியதாவது, நடிகையிலிருந்து அரசியல்வாதியாக மாறிய ஒருவர், இந்திய மக்களால் மிகவும் விரும்பப்பட்ட நபர் ஜெயலலிதா. அவரது வாழ்க்கை வரலாறை, படமாக தயாரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஜெயலலிதா கேரக்டருக்கு கங்கனா ரனாவத் மிகவும் பொருத்தமாக இருப்பார். படம் பார்ப்பவர்களுக்கு இந்த படம் உன்னதமான அனுபவத்தை தரும் என்று அவர் கூறினார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Thalaivi first look and teaser jayalalitha kangana ranaut