Advertisment

தலைவி பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - படக்குழு என்ன சொல்கிறது....

Thalaivi first look : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகும் படம் தலைவி. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்,டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalaivi, Kangana Ranaut,priyamani , Al Vijay, Jayalalithaa, Jayalalithaa biopic, ஜெயலலிதா, தலைவி, கங்கனா ரனாவத், தலைவி பர்ஸ்ட் லுக், ஏ.எல்.விஜய், எம்ஜிஆர், அரவிந்தசாமி, வாழ்க்கை வரலாறு, நடிகை, அரசியல்வாதி

Thalaivi, Kangana Ranaut,priyamani , Al Vijay, Jayalalithaa, Jayalalithaa biopic, ஜெயலலிதா, தலைவி, கங்கனா ரனாவத், தலைவி பர்ஸ்ட் லுக், ஏ.எல்.விஜய், எம்ஜிஆர், அரவிந்தசாமி, வாழ்க்கை வரலாறு, நடிகை, அரசியல்வாதி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகும் படம் தலைவி. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்,டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் , எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது வாழ்க்கை வரலாறை படமாக இயக்க பலரும் முனைப்பு காட்டினர். அதில் பிரம்மாண்ட பொருட்செலவில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை ஜெயலலிதாவாக நடிக்க வைத்து தலைவி என்ற தலைப்பில் ஏ.எல். விஜய் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தலைவி படம் அடுத்த ஆண்டு ஜூன் 26ம் தேதி திரைக்கு வருகிறது.

தலைவி படம் தொடர்பாக, கங்கனா ரனாவத் கூறியதாவது, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற பெண் நட்சத்திரம் ஜெயலலிதா . அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நான் அவரது கேரக்டரில் நடிக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த படத்தில் நடிப்பதற்காக பெருமைப்படுவதாக அவர் கூறினார்.

இந்த படத்துக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில், படத்தை எவ்வித பிரச்னையும் இன்றி வெளியிடும் வகையில், ஜெயலலிதாவின் உறவினர் தீபக் ஜெயக்குமாரிடம் இருந்து தடையில்லா சான்றிதழை படக்குழு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்துரி கூறியதாவது, நடிகையிலிருந்து அரசியல்வாதியாக மாறிய ஒருவர், இந்திய மக்களால் மிகவும் விரும்பப்பட்ட நபர் ஜெயலலிதா. அவரது வாழ்க்கை வரலாறை, படமாக தயாரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஜெயலலிதா கேரக்டருக்கு கங்கனா ரனாவத் மிகவும் பொருத்தமாக இருப்பார். படம் பார்ப்பவர்களுக்கு இந்த படம் உன்னதமான அனுபவத்தை தரும் என்று அவர் கூறினார்.

இயக்குனர் விஜய் கூறியதாவது, தலைவி பான் இந்தியா படம். இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க கங்கனா ரனாவத் பொருத்தமாக இருப்பார். ஜெயலலிதா சிறந்த நடிகை மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஒரு அரசியல்வாதி. அத்தகைய பவர்புல் கேரக்டரில் நடிக்க இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஹீரோயினை தேடுகையில், சிறந்த தேர்வாக கங்கனா ரனாவத் அமைந்தார்.

படத்தில் நடித்துவரும் மற்ற நடிகர், நடிகைகளின் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார்.

Jayalalithaa Kangana Ranaut
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment