Advertisment
Presenting Partner
Desktop GIF

ஜெயலலிதாவாக மாறுவதற்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்குறாங்களா கங்கனா!?

Kangana Ranaut's Thalaivi: அவருடைய (ஜெயலலிதா) கதை என் கதையை மிகவும் ஒத்திருந்தது. உண்மையில், இது என்னுடையதை விட பெரிய வெற்றிக் கதை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kangana ranaut thalaivi movie, jayalalithaa biopic

கங்கனா ரனாவத்

Jayalalithaa Biopic: நடிகை கங்கனா ரனாவத் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். ”தலைவி” என்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், டைட்டில் ரோலில் நடிக்கிறார் அவர். தற்போது இந்தப் படத்திற்காக இயக்குநர் மற்றும் குழுவினருடன் லாஸ் ஏஞ்சல்ஸ் பறந்துள்ளார் கங்கனா.

Advertisment

'பிளேட் ரன்னர்' மற்றும் 'கேப்டன் மார்வெல்' போன்ற படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற ஹாலிவுட் கலைஞரான ஜேசன் காலின்ஸ், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் கங்கனாவின் தோற்றத்தை உருவாக்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அந்த ப்ரொஸிஜரின் போது எடுக்கப்பட்ட படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கங்கனாவின் டீம்,  “கங்கனா ரனாவத் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜேசன் காலின்ஸின் ஸ்டுடியோவில் தலைவி படத்துக்காக புரோஸ்தெடிக் மேக்கப்பிற்காக அளவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஜேசன் இதற்கு முன்பு ”கேப்டன் மார்வெல்” படத்தில் ப்ரீ லார்சனுக்காக புரோஸ்தெடிக்கை உருவாக்கினார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நிச்சயமாக ஏதோ ஒன்று, மனதைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

புரோஸ்தெடிக்கிற்காக பச்சை மற்றும் நீல பேஸ்ட்டுகள் கங்கனா மீது ஊற்றப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கான கங்கனாவின் தயாரிப்பைக் கண்டு அவரது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் கங்கனாவின் பிறந்த நாளில், ஏ.எல்.விஜய் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம் பற்றி அறிவிக்கப்பட்டது. தனது அறிக்கையில், “ஜெயலலிதாஜி இந்த நூற்றாண்டின் முக்கியமான பெண், அவரது கதை வெற்றிக் கதைகளில் ஒன்றாகும். ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து பெரும் அரசியல்வாதியாக மாறினார். இது மெயின் ஸ்ட்ரீம் திரைப்படத்திற்கான சிறந்த கரு. இந்த மெகா ப்ராஜெக்ட்டின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்திருந்தார் கங்கனா.

தவிர பிறந்தநாளில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கங்கனா, ”நான் எனது சொந்த வாழ்க்கை வரலாறு தொடர்பான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். ஆனால் அவருடைய (ஜெயலலிதா) கதை என் கதையை மிகவும் ஒத்திருந்தது. உண்மையில், இது என்னுடையதை விட பெரிய வெற்றிக் கதை. இந்த படத்தின் கதையை நான் கேட்டபோது, இரண்டு கதைகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்தன. ஆகவே, அவருடைய கதையையோ அல்லது எனது கதையையோ அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தில் நடிக்க யோசித்தேன். இறுதியாக ஜெயலலிதா படத்தை டிக் செய்தேன்” என்றார்.

 

Jayalalithaa Kangana Ranaut
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment