/tamil-ie/media/media_files/uploads/2019/04/Atlee.jpg)
Complaint against Atlee: இயக்குநர் அட்லீ தற்போது நடிகர் விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தை ’தளபதி 63’ என்று அழைத்து வருகிறார்கள் படக்குழுவினர். இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார், ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தளபதி 63 திரைப்படத்தில் குணச்சித்திரம் மற்றும் காமெடி என இரண்டிலும் ஸ்கோர் செய்யும் தேவதர்ஷினி இணைந்திருக்கும் விஷயம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
இதற்கிடையே தளபதி 63 குழுவினர் அதிர்ச்சியடையும்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. ஆம்! இயக்குநர் அட்லீ மீது துணை நடிகை கிருஷ்ணா தேவி என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “EVP Film City-ல் நடந்த தளபதி 63 படபிடிப்பில் தன்னை வேலையில் கவனம் செலுத்தவிடாமல் அட்லியும், அவரது உதவியாளர்களும் தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, வெளியில் அனுப்பிவிட்டதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது சம்பந்தமாக அட்லீ மற்றும் அவரது உதவியாளர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிருஷ்ணா தேவி அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.