/tamil-ie/media/media_files/uploads/2018/11/d601.jpg)
AR Rahman performed live with his daughters
Thalapathy 63: கடந்த சில நாட்களாக ட்வீட்களால் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி என அவர் போட்ட ட்வீட்கள் மிகப்பெரும் அளவில் வைரலாகின. இதற்கிடையே 2.0 திரைப்படத்தின் சீனா ரிலீஸ் குறித்த செய்தியையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.
அதாவது, இயக்குநர் ஷங்கர் இயக்கி, நடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடித்திருந்த 2.0 திரைப்படம் சீனாவில் 56,000 ஸ்கிரீன்களில் ஜூலை 12-ம் தேதி ரிலீஸ் ஆவதாகவும், இதற்கான ப்ரீமியர் ஷோ ஜூன் 28-ம் தேதி நடைபெற இருப்பதாகவும் படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
#2Point0InChina ..on 56000 screens ... premiere on June 28th .. grand release on July 12th @shankarshanmugh@akshaykumar@rajinikanthpic.twitter.com/WSzj0tQo6e
— A.R.Rahman (@arrahman) 4 June 2019
அதோடு தனது ஸ்டூடியோவுக்கு வந்திருக்கும் அட்லியின் படத்தைப் பகிர்ந்து, ‘இங்கே யார் இருக்கிறார்கள் எனப் பாருங்கள். எடிட் செய்த இரண்டு பாடல்களை முதலில் பார்த்தது நான் தான்’ எனக் குறிப்பிட்டு தம்ஸ் அப் மற்றும் ஃபையர் எமோஜிக்களையும் இணைத்துள்ளார்.
Look who is here ????I am the first to see ... edit of two songs ???????????? pic.twitter.com/obUmUvQ94z
— A.R.Rahman (@arrahman) 4 June 2019
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘தளபதி 63’ படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கிடையே எந்நேரமும் ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.