/tamil-ie/media/media_files/uploads/2019/02/thalapathy-63.jpg)
Thalapathy Vijay
Thalapathy 63 : தளபதி 63 திரைப்படம் ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என கசிந்திருந்த தகவலுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.
தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் அட்லி - விஜய் கூட்டணியில் படம் உருவாகி வருகிறது. விஜய்க்கு இது 63வது படம் என்பதால் ப்யர் சூட்டப்படாத இந்த படத்தை இதுவரை தளபதி 63 என்றே அழைத்து வருகின்றனர்.
Thalapathy 63 : தளபதி 63 ரிலீஸ்
AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என ஆரம்பத்திலேயே அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால் படத்தையும் முன் கூட்டியே ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
February 2019Not true
— Archana Kalpathi (@archanakalpathi)
Not true
— Archana Kalpathi (@archanakalpathi) February 26, 2019
இது குறித்து தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருப்பதாவது, படம் ஆகஸ்ட் மாதமே வெளியாக உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை. ஏற்கனவே அறிவித்திருந்தபடி இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.