Advertisment

Thalapathy 63: விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தளபதி 63-யின் புதிய அறிவிப்பு!

Thalapathy 63: பயிற்சியாளராக விஜய் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalapathy 63 first look, hbd vijay

Thalapathy 63: நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லியின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

’தளபதி 63’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, இந்துஜா, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், பயிற்சியாளராக விஜய் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தற்போது படத்தைப் பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது ‘தளபதி 63’ படத்தின் ஆடியோ உரிமத்தை சோனி மியூஸிக் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இதற்கு முன்பு, விஜய் - அட்லி - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான மெர்சல் படத்தின் ஆடியோ உரிமத்தையும் சோனி நிறுவனம் தான் வாங்கியிருந்தது.

ரசிகர்கள் தளபதி 63 படத்தைப் பற்றி ஏதேனும் அறிவிப்பு வெளியாகாதா எனக் காத்துக் கொண்டிருந்த வேளையில், இந்த புதிய அப்டேட் அவர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Nayanthara Atlee Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment