Thalapathy 63: ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அட்லீயின் அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார்.
ஏ.ஜி.எஸ் சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு சென்னையின் பல பகுதிகளில் நடந்து வருகிறது.
தெறி, மெர்சல் ஆகியப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அட்லியும் விஜய்யும் மீண்டும் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
’தளபதி 63’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, கதிர், இந்துஜா, ரெபா மோனிகா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மெர்சல், சர்கார் படங்களின் போது ஒன்று ஜூன் 21 மாலை 6 மணிக்கும், மற்றொன்று ஜூன் 22 நள்ளிரவு 12 மணிக்கு என 2 போஸ்டர்கள் வெளியாகின. ஆனால் தளபதி 63-யைப் பொறுத்தவரை ஒரே ஒரு போஸ்டர் தான் வெளியிடப்படுகிறதாம்.
ஆனால் அது ஜூன் 21 மாலையிலா அல்லது ஜூன் 22 நள்ளிரவிலா என பின்னர் அறிவிக்க இருக்கிறார்களாம் படக்குழு.
தளபதி 63 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரின் மூலம், படத்தின் டைட்டிலை அறிந்துக் கொள்ள ஆவலோடு இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.