Thalapathy 63 Title: நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்யின் 63-வது படமாக உருவாகும் இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ’தெறி, மெர்சல்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக விஜய்யும் அட்லியும் இணைந்திருப்பதால், இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, கதிர், இந்துஜா, விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாகவும். அதில் மகன் கதாபாத்திரம் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில், படத்தின் அப்டேட் கேட்கும் ரசிகர்களுக்கு, தளபதி 63 படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார்.
I think most of you have forgotten that I am usually with you guys to ask the producer for Updates ???????? #Thalapathy63 update will happen when the time is right. We are working around the clock to exceed all your expectations ????????
— Archana Kalpathi (@archanakalpathi) 18 June 2019
அதில், ”படத்தின் தயாரிப்பாளரிடம் அப்டேட் கேட்டு, பெற்றுத் தர நான் இருப்பதை, உங்களில் பலர் மறந்து விட்டீர்களென நினைக்கிறேன். தளபதி 63 படத்தின் அப்டேட் சரியான நேரத்தில் உங்களை வந்தடையும். உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நாங்கள் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே தளபதி 63 படத்தின் தலைப்பு, ’வெறித்தனம், கேப்டன் மைக்கேல், சி.எம், வெறி’ ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Thalapathy 63 first look title for vijay birthday
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி