தளபதி விஜய் மற்றும் இயக்குநர் அட்லி கூட்டணியில் அடுத்ததாக உருவாகவுள்ள தளபதி 63 படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் மற்றும் அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். மேலும் இந்த படத்தில் காமெடியன் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. பின்னர் இதனை அவரே உறுதி செய்துள்ளார்.
தளபதி 63 படத்தில் நயன்தாரா
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க உள்ளது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
November 2018
இந்நிலையில், தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தற்போது விஸ்வாசம் படத்தில் இரட்டை அஜித் கேரக்டரில் இளைய அஜித்துக்கு ஜோடியாக நயன் நடித்து வருகிறார். அப்படியிருக்க விஜயுடனும் இவர் இணைந்து நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தளபதி மற்றும் நயன் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.