scorecardresearch

Thalapathy 63 Update: விஜய்யுடன் இணையும் ஷாருக் கான்? தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் தளபதி 63-யில் வில்லனாக நடிக்கிறார் என கடந்த வாரமே செய்திகள் வெளியாகின. 

Thalapathy 63: Vijay and Sharukh khan joining together?
Thalapathy 63: Vijay and Sharukh khan joining together?

Thalapathy 63 Update: ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து,  இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.

தளபதி 63 என்றழைக்கப்பட்டு வரும் அப்படத்தில் நயன்தாரா, கதிர், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மெர்சல், சர்கார் ஆகியப் படங்களைத் தொடர்ந்து விஜய்யின் இந்தப் படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

கால் பந்தாட்டத்தையும் அதில் நடக்கும் அரசியலையும் மையப் படுத்தி ‘தளபதி 63’ உருவாகி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகிவிட்டன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் தளபதி 63-யில் வில்லனாக நடிக்கிறார் என கடந்த வாரமே செய்திகள் வெளியாகின.

தற்போது படத்தைப் பற்றி வெளியாகியிருக்கும் தகவல் தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்குமென நம்புகிறோம்.

அதாவது தளபதி 63 படத்தில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் ஷாருக் கான், போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் வருகிறாராம். இந்த செய்தி, விஜய் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Thalapathy update sharukh khan to play a cameo in thalapathy