Thalapathy 63: நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லீயின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்யின் 63-வது படமான இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா, இந்துஜா, விவேக் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்திய இப்படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும், டைட்டிலும் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் உழைப்பாளர் தினத்தில், உழைப்பாளர்களுக்கு விருந்தும், பரிசுப் பொருட்களையும் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய். ஆனால் இந்தாண்டு தேர்தல் சமயம் என்பதால், அதனை செய்ய முடியவில்லை.
சில தினங்களுக்கு முன்பு மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், தற்போது ஆட்டோ டிரைவர்களுக்கு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் தளபதி.
ஆனால் அவர் படபிடிப்பில் இருந்த காரணத்தினால், அவரின் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்க மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், இந்நிகழ்வை நடத்தியுள்ளார்.
நிகழ்வில் கலந்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மதிய உணவுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
விஜய்யின் இந்த விருந்தினால் உற்சாகமடைந்துள்ளனர் உழைப்பாளிகளான ஆட்டோ ஓட்டுநர்கள்.