Advertisment

விஜய்யின் ‘குட்டி ஃபேன்களுக்கு’ தளபதி 63-யின் ட்ரீட்!

’குழந்தைகளோடு குழந்தையாக மாறி அந்தப் பாடலை மிகவும் என்ஜாய் செய்து, விஜய் நடனமாடினார்’ என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Birthady Vijay, thalapathy 63 first look, actor vijay, தளபதி விஜய்

சர்கார் திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ’தளபதி 63’ என்றே குறிப்பிட்டு வருகிறார்கள் படக்குழுவினர். இதில் விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, கதிர், விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். மெர்சல், சர்காரை தொடர்ந்து, இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Advertisment

குழந்தைகளிடத்தில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரின் பாடல்களுக்கு நடனமாடாமலும், நாவை அசைக்காமலும் இருக்கும் குழந்தைகளை கண்டறிவது கடினம்.

விஜய்யின் இந்த ‘குட்டி ஃபேன்களுக்கு’ தளபதி 63-யில் ஒரு அட்டகாசமான ட்ரீட் உண்டு. ஆம்! சென்னை விமான நிலையத்திற்கு அருகே, பின்னி மில்லின் வளாகத்தில் பிரமாண்ட செட் அமைத்து, தளபதி 63-யில் விஜய்யில் அறிமுகப் பாடல் படமாக்கப்பட்டதாம். இதில் இரவு - பகலாக 250 நடன கலைஞர்கள் நடனமாடியிருக்கிறார்கள். அந்த 250-ல் 100 பேர், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளாம். ’குழந்தைகளோடு குழந்தையாக மாறி அந்தப் பாடலை மிகவும் என்ஜாய் செய்து, விஜய் நடனமாடினார்’ என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.

விஜய்யின் சாதாரண பாடலே குழந்தைகளிடத்தில் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் போது, குழந்தைகளை ‘இம்ப்ரெஸ்’ செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தளபதி ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Actor Vijay Atlee Thalapathy Vijay Joseph Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment