தளபதி 64 நடிகை, இந்த விசயத்திலேயும் கில்லாடியா இருக்காங்களே…

Thalapathy 64 Malavika Mohanan : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன் சிறந்த நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாது, சிறந்த புகைப்பட கலைஞர் என்றும் நிரூபித்துள்ளார்.

vijay, vijay 64, thalapathy 64, malavika mohanan, wildlife, safari,Malavika Mohanan,Kollywood, petta, rajinikanth
vijay, vijay 64, thalapathy 64, malavika mohanan, wildlife, safari,Malavika Mohanan,Kollywood, petta, rajinikanth, விஜய், தளபதி 64, மாளவிகா மோகனன், வனவிலங்குகள், போட்டோகிராபி, பேட்ட, ரஜினிகாந்த்

Thalapathy 64 Malavika Mohanan : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன் சிறந்த நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாது, சிறந்த புகைப்பட கலைஞர் என்றும் நிரூபித்துள்ளார்.

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் தற்போதைய அளவில் தளபதி 64 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனனுக்கு தமிழில் இது இரண்டாவது படம் ஆகும். முன்னதாக, பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தற்போது சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் சிறந்த நடிகையாக திகழ்ந்து வரும் நிலையில் தான் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

தளபதி 64 படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு முன்பாக, மாளவிகா மோகனன், தான்சானியா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம் சென்றிருந்தார். அங்குள்ள வனப்பகுதிகளில் தான் எடுத்த போட்டோக்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கம்

தனக்கு வனவிலங்குகளை படம்பிடிப்பதில் அதிக ஆர்வம் உள்ளதாக கூறியுள்ள மாளவிகா, நமது நாட்டிலேயே உள்ள மசினகுடி, வயநாடு, கபினி உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் சுற்றித்திரிந்து வனவிலங்குகளை படம்பிடித்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆப்ரிக்க காடுகளில் வனவிலங்குகளை படம்பிடித்த நிகழ்வு பெரிய சாகசமாக இருந்ததாகவும், மீண்டும் இதுபோன்ற அரிய சாகச பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவர் கூறினார். ஒரு மரத்தின் உச்சியில் படுத்திருந்த பெண் புலியை, படம்பிடிக்க 20 நிமிடங்களுக்கு மேல் அமைதியாக பொறுமை காத்து படம்பிடித்ததாகவும், இந்த முயற்சி வீண்போகவில்லை. படம் சிறப்பாக வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thalapathy 64 actress malavika mohanan wildlife photography petta rajinikanth

Next Story
இவ்வளவு கியூட்டா போஸ் கொடுத்தா எப்படி! – அதுல்யா ரவி ஸ்பெஷல் போட்டோஸ்Athulya Ravi Latest Photos
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com