Thalapathy 64 first look poster news: தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக விஜய் ரசிகர்களின் வெறித்தன வெயிட்டிங் முடிவடைய இருக்கிறது. புத்தாண்டை ஒருநாள் முன்னதாக கொண்டாடும் விதமாக விஜய் 64 படக் குழுவினர் இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் இது. சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் அப்டேட் கேட்டு கடந்த சில தினங்களாக விஜய் ரசிகர்கள் படக் குழுவினரை நச்சரித்து வந்தனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக படக்குழுவினர் கடந்த 28-ம் தேதி அறிவித்தனர்.
உலகமே புத்தாண்டு கொண்டாடும் ஆர்வத்தில் இருக்க, விஜய் ரசிகர்கள் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கொண்டாடும் உத்வேகத்தில் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக ட்விட்டரிலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
விஜய் ரசிகர்களின் வெறித்தன வெயிட்டிங் முடிவுக்கு வருகிறது. தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தொடர்பான லைவ் செய்திகளை இங்கு காணலாம்.
Thalapathy Vijay 64 First Look: இந்தப் படத்தின் அப்டேட் கேட்டு கடந்த சில தினங்களாக விஜய் ரசிகர்கள் படக் குழுவினரை நச்சரித்து வந்தனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக படக்குழுவினர் கடந்த 28-ம் தேதி அறிவித்தனர்.
உலகமே புத்தாண்டு கொண்டாடும் ஆர்வத்தில் இருக்க, விஜய் ரசிகர்கள் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கொண்டாடும் உத்வேகத்தில் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக ட்விட்டரிலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Web Title:Thalapathy 64 first look poster vijay 64 first look live news
விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், 2 மில்லியன் ட்வீட்களை கடந்துள்ளது.
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டுவிட்டரில் விஜய் ரசிகர்களால் ஹேஷ்டேக் மாஸ்டர் என 1 மில்லியன் முறைக்கு மேல் பதிவிடப்பட்டதால் டுவிட்டரில் மாஸ்டர் 1 மில்லியனைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.
விஜய் நடித்துள்ள மாஸ்ட்ர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலேயே டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. தற்போது விஜய் ரசிகர்கள் 9 லட்சம் முறை மாஸ்டர் என டுவிட் செய்துள்ளனர். விரைவில் 1 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்துள்ள தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸ்டர் என்று பெயரிடப்பட்டு வெளியானது. விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் ரசிகர்கள் சினிமா வெளியானதைப் போல கொண்டாடி வருகின்றனர்.
ராம் சினிமாஸ் திரையரங்கில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ராம் சினிமாஸ் திரையிட்டுள்ளது. அப்போது ரசிகர்கள் தங்கள் செல்போனில் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக்கை படம்பிடித்து கொண்டாடினார்கள்.
விஜய்யின் தளபதி 64 படத்தின் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதற்குள், மாஸ்டர் படத்தின் சேல்போன் கேஸ் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு மாஸ்டர் என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், வாவ்.... மாஸ்டர் செம்ம சார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் பெயர் மாஸ்டர். இதில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் என்று விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பற்றி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மாஸ்டர் படத்தின் தலைப்பில் பிரமிடு அடையாளம் இருக்கிறது. விஜய் கையில், ‘ரிங்’ வைத்து சுழற்றுவதாக இருக்கிறது. இதெல்லாம் படத்தின் கதையோட்டம் தொடர்பான குறியீடுகளாக பார்க்கப்படுகிறது.
தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், படத்தின் பெயரையும் அறிவித்திருக்கிறார்கள். படத்தின் பெயர், மாஸ்டர். ஆக, விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக புத்தாண்டுக்கு முதல் நாள் கிடைத்திருக்கிறது.
விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் காட்சி, இதுவரை விஜய்யின் எந்தப் படத்திலும் இல்லாத அளவில் வித்தியாசமாக இருக்கிறது. மாஸும் கிளாஸும் கலந்த ஃபர்ஸ்ட் லுக்காக இதை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
இதோ... விஜய் ரசிகர்கள் ஏங்கிக் கிடந்த தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இங்கு அப்டேட் செய்யப்படுகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இன்னும் சற்று நேரத்தில் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பிலும் உற்சாகத்திலும் திளைக்கிறார்கள். டிவிட்டரை ட்வீட்களால் திணறடித்து வருகிறார்கள்.
தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டைத் தொடர்ந்து, #Thalapathy64FirstLook என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட்களை வெளியிட்டு வருகிறார்கள்.
திருநெல்வேலி ராம் முத்துராம் உள்பட பல தியேட்டர்களில் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு காட்சியை பெரிய திரையில் காட்டுகிறார்கள். இதற்கு கட்டணம் கிடையாது. இதைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து குவிகிறார்கள்.