/tamil-ie/media/media_files/uploads/2019/10/Thalapathy-64-Poojai.jpg)
Thalapathy 64 Poojai, Thalapathy Vijay, Vijay Sethupathy
Thalapathy 64 Movie Poojai: தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் முதன்மையானவர். இவரது நடிப்பில் ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ’மாநகரம்’ படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை ‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. ’பிகில்’ படத்தில் விஜய்யும், கார்த்தியின் ‘கைதி’ படத்தில் லோகேஷும் பிஸியாக இருந்ததால், இரண்டு படங்களின் வேலைகளும் முடிந்த பிறகு ’தளபதி 64’ படபிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கியக் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸும் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதோடு நடிகர் சாந்தனு மற்றும் நடிகை மாளவிகா மோகனனும் ‘தளபதி 64’ல் நடிக்கும் செய்தியும் இன்று காலை உறுதிப்படுத்தப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/Thalapathy-64-Poojai-today.jpg)
இந்நிலையில் தற்போது தளபதி 64 திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், அனிருத், ஸ்டண்ட் இயக்குநர் சில்வா மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டுள்ளனர். தற்போது அங்கு எடுக்கப்பட்ட படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சும்மாவே அனைத்தையும் டிரெண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள் இதை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? அதனால் #Thalapathy64Poojai என்ற ஹேஷ்டேக்கில் இதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அது தற்போது ட்ரெண்டிங்கிலும் உள்ளது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.