Advertisment

Thalapathy 64: விரைவில் தொடங்கும் ‘தளபதி 64’ படபிடிப்பு!

விஜய்யின் அடுத்தப் படமான ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thalapathy 64 movie, thalapathy vijay

விஜய்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அரசியலை மையமாக வைத்து இயக்கிய சர்க்கார் படத்தில் நடித்திருந்தார் நடிகர் விஜய். இந்தப் படம் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியானது. சர்க்கார் வெளியான பிறகு, விஜய் தனது 63 வது திரைப்படமான பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் அட்லீ இயக்கி வரும் இந்தப் படத்தை, ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

’பிகில்’ படத்தில் நயன்தாரா, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்தூஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, விவேக், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தியுள்ள இந்தப் படத்தில், இரட்டை வேடங்களில் நடிக்கிறார் விஜய். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிகில் படப்பிடிப்பை முடித்த விஜய், தனது அடுத்தப் படத்திற்கு தயாராகி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது விஜய்யின் அடுத்தப் படமான ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment