Thalapathy 64: விஜய்யின் ’தளபதி 64’ படத்தில் நடிக்கும் 2 நடிகைகள் இவர்கள் தான்!

இரண்டு ஹீரோயின்கள் கதையான இந்தப் படத்தில் நடிக்க இவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

இரண்டு ஹீரோயின்கள் கதையான இந்தப் படத்தில் நடிக்க இவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalapathy vijay, thalapathy vijay with his friends, vijay abroad trip

Thalapathy Vijay

Thalapathy 64 Heroines: நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது. இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அப்பா - மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய். ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், கதிர், நயன்தாரா, இந்துஜா, உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Advertisment

பிகில் பிஸினஸ்: வெளியீட்டிற்கு முன்பே 220 கோடி வசூலித்த ’பிகில்’

‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து, ’மாநகரம்’, ‘கைதி’ ஆகியப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்தப் படத்தில் நடிக்கிறார் விஜய். முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இதுவரை நாம் பார்க்காத விஜய்யை இந்தப் படத்தில் பார்ப்போம் என்றும், விஜய் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்றும் இந்தப் படம் குறித்து செய்திகள் வெளியாகின்றன. விஜய்யின் பட அறிவிப்புகள் வெளியாகும் போது, இதில் ஹீரோயின் யார்? என்ற எதிர்பார்ப்பும் கூடவே தொற்றிக் கொள்ளும். அந்த பரபரப்புக்கு தளபதி 64 படமும் குறை வைக்கவில்லை.

Thalapathy 64 heroines Rashmika Mandana, Rashi Khanna

Advertisment
Advertisements

மீண்டும் நயன்தாரா? மீண்டும் த்ரிஷா? அல்லது ரகுல் ப்ரீத் சிங்? என ரசிகர்களின் யூகம் அதிகரித்தது. இந்நிலையில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனாவும், ராஷி கண்ணாவும் தளபதி 64 படத்தில் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இரண்டு ஹீரோயின்கள் கதையான இந்தப் படத்தில் நடிக்க இவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையே தனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும் என ராஷ்மிகா ஒரு நேர்க்காணலில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: