தளபதி 64: விஜய் படத்தில் இணைந்த அமலாபால் பட இயக்குநர்!

இயக்குநர் ரத்னகுமார் கூடுதல் திரைக்கதை எழுத்தாளராக தளபதி 64-ல் இணைந்துள்ளார்.

இயக்குநர் ரத்னகுமார் கூடுதல் திரைக்கதை எழுத்தாளராக தளபதி 64-ல் இணைந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalapathy 64, director rathna kumar

Thalapathy 64: திங்கள்கிழமை முதல் தளபதி 64 படக்குழுவினர் அப்டேட் மழை பொழிந்து வருகிறார்கள். தளபதி விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் பெப்பே, சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பது சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், பிலோமின் ராஜ் எடிட்டிங்கையும் கவனிக்கிறார்கள். அக்டோபர் 3 ஆம் தேதி பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 2020-ன் கோடை விடுமுறைக்கு தளபதி 64 வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில் தற்போது 'மேயாத மான்' மற்றும் 'ஆடை' ஆகியப் படங்களின் இயக்குநர் ரத்னகுமார் கூடுதல் திரைக்கதை எழுத்தாளராக தளபதி 64-ல் இணைந்துள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பொன் பார்த்திபன் ஆகியோருடன் தான் பணியாற்றுவதை ரத்ன குமார் தனது ட்விட்டரிலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

’தளபதியுடன் பணிபுரிவதை நம்ப முடியவில்லை. வாய்ப்பளித்த நண்பர் லோகேஷுக்கு நன்றி’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: