/tamil-ie/media/media_files/uploads/2019/05/vijay-2.jpg)
Thalapathy Vijay's 'Thalapathy 64': நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் இந்தப் படத்தை, ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, இந்துஜா, விவேக், ஆனந்த்ராஜ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
The young and talented, #AngamalyDiaries fame @VarghesePepe steps into KTown with #Thalapathy64! Welcome on board!???? #AntonyJoinsThalapathy64#Summer2020@actorvijay@Dir_Lokesh@anirudhofficial@VijaySethuOffl@SonyMusicSouthpic.twitter.com/F1tV7PBRKH
— XB Film Creators (@XBFilmCreators) October 1, 2019
இதனைத் தொடர்ந்து, ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். தற்போது ‘தளபதி 64’ என அழைக்கப்படும் இந்தப் படம் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது, படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ்’. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி, தளபதி 64-ல் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் சுவாரஸ்ய முடிச்சை அவிழ்த்து ரசிகர்களை குஷிப்படுத்தியது.
தளபதி 64 படத்தைப் பற்றி, அடுத்த மூன்று நாட்களில் புதிய அப்டேட்டுகள் வெளிவரும், எனக் கூறப்பட்டது. அந்த வகையில், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் பெப்பே 'தளபதி 64' படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த 'அங்காமலே டைரிஸ்' என்ற படத்தில் ஆண்டனி வர்கீஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். தளபதி 64 அவருக்கு முதல் தமிழ் படம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.