தளபதி 64 படபிடிப்பில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்!

திடீரென காரில் இருந்து இறங்கிய விஜய், தனது ரசிகர்களை நோக்கி கையசைக்கிறார்.

Thalapathy 64 : ’பிகில்’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

’தளபதி 64’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ரம்யா, ஆண்ட்ரியா, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி 1-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்ஜிடையே விஜய்யின் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பின் போதும், விஜய்யை காண ரசிகர்கள் குவிந்து விடுவார்கள். படபிடிப்பு தளத்திற்கு சென்று, ஒரு நொடியாவது விஜய்யைப் பார்த்து விட மாட்டோமா என ஏங்குவார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தளபதி 64 படபிடிப்பிலும் இது தான் நிகழ்ந்துள்ளது. விஜய்யை காண ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள். அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய விஜய், தனது ரசிகர்களை நோக்கி கையசைக்கிறார். சந்தோஷத்தில் சத்தம் போட்டு ஆரவாரம் செய்கிறார்கள் ரசிகர்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close