/tamil-ie/media/media_files/uploads/2019/10/New-Project-1.jpg)
malavika mohanan, thalapathy 64, vijay 64, malavika, malavika mohanan petta, malavika mohan, thalapathy 64 update,விஜய், தளபதி 64, மாளவிகா மோகன், malavika menon, vijay 64 update, thalapathy 64 cast
Thalapathy 64 Vijay movie Malavika Mohan photos viral: நடிகர் விஜயின் தளபதி 64 படத்தில் ஜோடியாக நடிக்கும் நடிகை மாளவிகா மோகனின் கவர்ச்சிமிகு அழகான புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.
நடிகர் விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக தளபதி 64 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில், தளபதி 64 படத்தில் யார் ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்று விஜய் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவிவந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக விஜயின் தளபதி 64 படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகன் ஜோடியாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/New-Project-2-300x200.jpg)
இதனை மாளவிகா மோகன் தனது டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாளவிகா மோகனின் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள அவரது கவர்ச்சி மிகு அழகான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை மாளவிகா மோகன் இதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்துள்ளார். தற்போது தளபதி 64 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று அந்த படத்திற்கான பூஜையில் கலந்துகொண்டதை தெரிவித்துள்ளார்.
???????? #Thalapathy64Poojapic.twitter.com/ybISpzkOna
— malavika mohanan (@MalavikaM_) October 3, 2019
மேலும், இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த நிலையில், சில்ட்ரன் ஆஃப் ஹெவன், தி கலர் ஆஃப் பேரடைஸ், வில்லோ ட்ரீ உள்ளிட்ட்ட உலகப் புகழ்பெற்ற படஙக்ளை இயக்கிய இயக்குனர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்திலும் நடித்துள்ளார்.
நடிகை மாளவிகா மோகன், தளபதி 64 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மிகுந்த உற்சாகம் அளிப்பதாகவும், படத்தின் இயக்குநர் லோகஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.