Thalapathy 64: தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பு இவருக்குத்தான்!

நான் அவருடன் வேலை செய்ய விரும்புகிறேன். இது யாருக்காவது கேட்கிறதா?

நான் அவருடன் வேலை செய்ய விரும்புகிறேன். இது யாருக்காவது கேட்கிறதா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay, thalapathy 64, antony varghese

Thalapathy 64: நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லியின் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisment

ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

வரும் தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் தனது அடுத்தப் படத்தில் ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜுடன் கை கோர்க்கிறார் விஜய். இந்தப் படத்தில் வேலை செய்யப் போகும் தொழில்நுட்ப குழுவை ஒருவழியாக முடிவு செய்து விட்டார்கள். ஆனால் படத்திற்கு ஹீரோயின் மற்றும் இன்னும் தேர்வாகவில்லை.

Advertisment
Advertisements

இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தான் விஜய்யுடன் நடிக்க விருப்பப் படுவதாக பல முறை தனது ஆசையை ரகுல் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“எனக்கு அவருடைய நடனம் பிடிக்கும். அவருடைய நடிப்புப் பிடிக்கும். ஆரம்பத்திலிருந்து இப்போது வரை ஒரே மாதிரி இருக்கிறார். நான் அவருடன் வேலை செய்ய விரும்புகிறேன். இது யாருக்காவது கேட்கிறதா?” என முன்பே ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்திருந்தார்.

தவிர, தளபதி 64-க்கான நடிகைகள் பட்டியலில் அடுத்து இருப்பது, ‘இன்கெம் இன்கெம் இன்கெம்’ புகழ் ராஷ்மிகா மந்தனாவும், நிறைய படங்களில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷாவும்!

Actor Vijay Rakul Preet Singh Trisha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: