லோகேஷ் கனகராஜ் இயக்கம்... அனிருத் இசை - ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

‘மாநகரம்’ எனும் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் சூப்பர்ஹிட படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் அவரது 63வது படமாகும். இந்நிலையில், விஜய்யின் 64வது திரைப்படம் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் 2020ல் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஃபிலோமின் ராஜ் எடிட் செய்ய, ஸ்டன்ட் சில்வா ஃபைட் மாஸ்டராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, #Thalapathy64 எனும் ஹேஷ்டேக் இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close