Thalapathy Vijay: நடிகர் விஜய் நடிப்பு, நடனம், காமெடி, பாடல், ஆக்ஷன், சத்தமில்லாமல் செய்து வரும் உதவி என பலவற்றால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இவரை அவ்வளவு பிடிக்கும்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஜய் ரசிகர்கள், அவர் குறித்த செய்திகள் ஒவ்வொன்றையும் பெரிதளவில் ட்ரெண்ட் செய்வார்கள். இதற்கிடையே, தெலுங்கு திரையுலகில் #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த வகையில், சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு, “எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. இந்த #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இந்தச் சங்கிலி எல்லைகளைக் கடந்து தொடரட்டும். இதற்கு நீங்கள் எல்லாரும் ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய், தனது வீட்டில் மரக்கன்றை நட்டு, அந்தப் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ”இது உங்களுக்காக மகேஷ் பாபு. பசுமை இந்தியாவுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும்… பாதுகாப்பாக இருங்கள்” என்றும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
Thanks a lot brother for taking this up???? Stay safe! ????????
இந்தப் படங்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலாகியது. குறிப்பாக அந்தப் படங்கள் விஜய் ரசிகர்களுக்கு பெரும் விருந்தளித்தது. கோடை விடுமுறைக்கு அவரின் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அதன் வெளியீடு தள்ளிப் போனது. பெருந்தொற்றால் விஜய்யும் வீட்டிலேயே இருக்கிறார். அவரைப் பார்க்க மாட்டோமோ என்று ஏங்கிய ரசிகர்கள், விஜய்யின் இந்தப் படங்களைப் பார்த்து குஷியானார்கள்.
இதற்கிடையே விஜய்யின் இந்த க்ரீன் இந்தியா சேலஞ்சை பாராட்டி பிரபலங்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Both mahesh Babu sir n our Vijay sir have millions of fans.When they do some thing good for nature,all their fans will b inspired to follow it n do good.We shd appreciate this. Plz don’t ever compare one with another. Our ultimate aim is a greener earth????????
”மகேஷ் பாபு சார், நமது விஜய் சார் இருவருக்கும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இயற்கைக்கு ஏதாவது நல்லது செய்யும்போது, அவர்களின் ரசிகர்கள் அனைவரும் அதைப் பின்பற்ற ஊக்கமாக இருப்பார்கள். இதை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். தயவுசெய்து ஒருபோதும் ஒன்றை மற்றொன்டோடு ஒப்பிட வேண்டாம். நமது நோக்கம் ஒரு பசுமையான பூமி தான்.” என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.