/tamil-ie/media/media_files/uploads/2019/10/Thalapathy-Vijay-Atharvaa-1.jpg)
Thalapathy Vijay Atharvaa
Thalapathy Vijay: நடிகர் அதர்வா மறைந்த நடிகர் முரளியின் மகன், அவருக்கு காவ்யா என்ற சகோதரியும், ஆகாஷ் என்ற சகோதரரும் உள்ளனர்.
தளபதி விஜய்யின் நெருங்கிய உறவினரை ஆகாஷ் காதலிக்கிறார் என்றும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் பரவியிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தை இயக்கிய அந்தப் பெண் கிறிஸ்தவர் என்பதாலும், ஆகாஷ் இந்து என்பதாலும், தனது சகோதரர் சார்பாக இரு குடும்பத்தையும் சமாதானப்படுத்தி வருகிறாராம் அதர்வா.
இந்நிலையில் இரண்டு குடும்பங்களும் ஏறக்குறைய புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதால், விரைவில் திருமண ஏற்பாடுகள் தொடங்கும் என்கிறார்கள் நெருங்கியவர்கள். இதன் மூலம் விஜய் மற்றும் அதர்வா நெருங்கிய உறவினர்களாக மாறப்போகிறார்கள் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் கோலிவுட் ரசிகர்கள். இருப்பினும் இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தீபாவளியன்று வெளியாகும் 'பிகில்' படத்திற்காக காத்திருக்கிறார் விஜய், இதனை அட்லீ இயக்கியிருக்கிறார். அதோடு லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 64' படப்பிடிப்பையும் தொடங்கவிருக்கிறார். அதர்வா 'குருத்தி ஆட்டம்' மற்றும் ’ஒத்தைக்கு ஒத்தை’ ஆகியப் படங்களை தனது கைவசம் வைத்திருக்கிறார்.
தவிர எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்த ’சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை அதே தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது உறவினர் சிநேகா பிரிட்டோ என்றவர் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.