Thalapathy Vijay: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிக எதிர்ப்பார்ப்புக்குரிய பிகில் திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் படக்குழுவினர். படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ‘பிகில்’ படத்தின் ஆடியோ லாஞ்ச் நடப்பதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. இந்நிலையில் பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நடிகர் விஜய்யின் பெண் ரசிகைகளுக்கு ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது.
அதாவது விஜய்யை தங்களுக்கு ஏன் பிடிக்கும் என்பதற்கான காரணத்தை அந்த ‘சிங்கப்பெண்கள்’ ட்விட்டரில் தெரிவிக்க வேண்டும். சிறந்த பதில் தரும் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் விஜய்யின் பிகில் ஆடியோ லாஞ்சை நேரில் கண்டுகளிப்பதற்கான பாஸை ’வின்’ பண்ண முடியும்.
To all the Nanbi’s here is a chance to watch our #Thalapathy at #BigilAudioLaunch and listen to his inspiring speech ???????? Thank you @actorramya for hosting this for us. Welcome on board #BigilAudioLaunch team ???? @Ags_production @agscinemas #AgsSingapenneyContest https://t.co/dn73vi8AM2
— Archana Kalpathi (@archanakalpathi) September 14, 2019
இதற்கிடையில் அவர்கள் படு சுவாரஸ்யமான பதிலைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர். இதில் எத்தனைப் பேர் சிறப்பான பதிலை தந்து, பாஸை பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்த்து பார்க்கலாம்.