Bigil Full Movie Download Tamilrockers, Bigil Tamil Movie, Bigil Tamil Movie Online Watch, பிகில், பிகில் ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ்
Thalapathy Vijay: மெர்சல் படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பிகில்’. ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து தற்போது பரபரப்பான போஸ்ட் புரொடக்ஷனில் உள்ளது. இதில் விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி மற்றும் விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
Advertisment
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதியுள்ளார். பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 27, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. தீபாவளி ஞாயிற்றுக் கிழமை என்பதால், அக்டோபர் 24-ம் தேதியான வியாழக் கிழமை இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தப் படத்தின் பாடல்கள் 19.09.2019 அன்று வெளியாகும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ‘பிகில்’ படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், ”ஒவ்வொரு ஆண்டும் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதியின் பேச்சைக் கேட்பதற்காகவும், அந்த நாளில் என் தேதியை ஃப்ரீ செய்துக் கொள்ளவும், தளபதியின் ஆடியோ லாஞ்ச் அறிவிப்புக்காக காத்திருப்பேன். ஆனால் என்னால் நம்ப முடியவில்லை. இந்த வருடம் அந்த தேதியை நானே அறிவிக்கிறேன். கனவு நனவாகி விட்டது. அந்த ஸ்பெஷல் தினம் 19.09.19. ஏ.ஆர்.ரஹ்மான் சார் மற்றும் அவரது உலகத் தரம் வாய்ந்த இசைக் கலைஞர்களோடு ஒரு சிறப்பான விழாவாக நாங்கள் இதனை ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்புறம் என்ன இனி விஜய் ரசிகர்கள் ஸ்டார்ட் மியூஸிக்..!