ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த பிகில் படத்தின் புதிய போஸ்டர்!

Bigil New Poster: பட விழாக்களில் கலந்துக் கொள்வதை தவிர்க்கும் நயன்தாரா, பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Bigil audio launch live thalapathi vijay nayanthara ar rahman- பிகில் ஆடியோ லாஞ்ச், தளபதி விஜய், நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான்
Bigil Audio Launch Live

Thalapathy Vijay: ‘தெறி, மெர்சல்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் ’பிகில்’ படத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். தற்போது இந்தப் படம் பரபரப்பான போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது. வில்லு படத்திற்குப் பிறகு பிகில் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19-ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. பொதுவாக தான் நடிக்கும் பட விழாக்களில் கலந்துக் கொள்வதை தவிர்க்கும் நயன்தாரா, பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது கொள்கையை தனது நண்பர் அட்லீக்காக தளர்த்தியிருக்கிறாராம் நயன்தாரா. நடிக்க போவதில்லை என முடிவெடுத்த நயனுக்கு, ’ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தவர் அட்லீ என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையே நேற்று மாலை பிகில் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் லுங்கியில், கையில் கத்தியுடன் மாஸாக நிற்கிறார் விஜய். இசை வெளியீடு வரும் 19-ம் தேதி என்பதை இந்த போஸ்டர் மூலம் மீண்டும் உறுதி படுத்தியுள்ளனர்.

‘Traffic’ ஷகுர் பானு : இரவில் மருத்துவமனை பனி… பகலில் போக்குவரத்தை சீர் செய்தல்.

பிகில் படத்தின் இந்த புதிய போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் பிகில் படத்தில்,  இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி மற்றும் விவேக் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Web Title: Thalapathy vijay bigil audio launch poster reactions atlee ags entertainment

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express