”அது என்னோட கதை இல்ல” விஜய் ட்ரோலுக்கு முற்றுப்புள்ளி வைத்த கவிதா ஜவஹர்!
Kavitha Jawahar on Bigil Audio Launch: சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் விஜய்க்கு பெரிய ரசிகை என்று தெரிவித்த அவர், இனி அவரின் பேச்சுக்கும் ரசிகை என்றார்.
Kavitha Jawahar on Bigil Audio Launch: சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் விஜய்க்கு பெரிய ரசிகை என்று தெரிவித்த அவர், இனி அவரின் பேச்சுக்கும் ரசிகை என்றார்.
Thalapathy Vijay: நடிகர் விஜய் தற்போது பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது.
Advertisment
கடந்த வாரம் பிகில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இவ்விழா பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. விழாவில் பேசிய விஜய், ”சரியான நபருக்கு சரியான வேலை வழங்கப்பட வேண்டும்” என்ற செய்தியை பார்வையாளர்களுக்கு தெரிவிக்க திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட ஒரு குட்டிக் கதையை சொன்னார்.
அதாவது, “பூக்கடையில் பணிபுரியும் ஒருவன் வேண்டப்பட்டவன் என்பதற்காக, பட்டாசுக் கடையில் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டான். பூ விற்றதைப் போல அவனால் பட்டாசு விற்க முடியவில்லை. என்ன காரணம் என ஆராயும் போது, பூக்கடையில் இருந்ததைப் போலவே 10 நிமிடத்திற்கு ஒருமுறை பட்டாசுகளில் தண்ணீர் தெளிப்பதை வழக்கமாக வைத்திருந்தான்” என்ற கதையைக் கூறினார்.
Advertisment
Advertisements
இந்த திருக்குறளும் கதையும், பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியவை என்பதால், விஜய்யை ட்ரோல் செய்து வந்தனர் நெட்டிசன்கள். தற்போது இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கவிதா.
சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் விஜய்க்கு பெரிய ரசிகை என்று தெரிவித்த அவர், இனி அவரின் பேச்சுக்கும் ரசிகை என்றார். விஜய் சொன்ன கதை தன்னுடைய சொந்த கதை இல்லை என்ற கவிதா, பட்டிமன்றங்களில் காலங்காலமாக பயன்படுத்தப்படும் கதை தான் இது என்றும் கூறினார். மேலும், விஜய் கூறிய திருக்குறள் திருவள்ளுவர் எழுதியதென்றும், அந்த கதை தன்னுடையது இல்லை என்றும் குறிப்பிட்ட கவிதா, விஜய் தன்னிடமிருந்து அந்த கதையை காப்பி செய்து விட்டதாக வரும் ட்ரோல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.