Advertisment

தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக விஜய்யின் ’பிகில்’!

Thalapathy Vijay : பிகில் திரைப்படம், தமிழகத்தில் ரூ.140 கோடி வசூலித்த ‘விஸ்வாசம்’  படத்தின் வசூலை தாண்டியது போல் தெரிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigil box office collection, thalapathy vijay

பிகில் வசூல்

Bigil Box Office Collection: ’பிகில்’ தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அந்தப் படம் வெற்றிகரமான நான்காவது வாரத்தில் ரூ. 142.75 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம், தமிழகத்தில் ரூ.140 கோடி வசூலித்த ‘விஸ்வாசம்’  படத்தின் வசூலை தாண்டியது போல் தெரிகிறது.

Advertisment

மேலும், "பிகில் இந்த ஆண்டில் உள்நாட்டில் ரூ.200 கோடி வசூல் செய்த இரண்டாவது படம் என்றும், ரஜினிகாந்த், பிரபாஸ் மற்றும் யஷ் ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நடிகர் விஜய்" என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் ரூ.19.65 கோடியை வசூலித்து, கேரளாவில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக பிகில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் விக்ரமின் ’ஐ’ திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளியிருப்பதாகவும், பிகில் குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அட்லீ இயக்கத்தில், கடந்த மாதம் வெளியானது 'பிகில்' திரைப்படம். இதில் கேங்ஸ்டர், பெண்கள் கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் விஜய்.

1992-ல் தேவர்மகன், 2019-ல் பிகில் : பழைய இந்தியா, புதிய இந்தியா

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்த, இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, ரெபா மோனிகா ஜான், அம்ரிதா ஐயர், வர்ஷா, கதிர், விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் தெலுங்கில் ’விசில்’ என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது.

Atlee Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment