Advertisment

புதிய ரெக்கார்டைப் படைத்த விஜய்யின் ’பிகில்’ பிஸினஸ்!

Thalapathy Vijay: இதன் தெலுங்கு டப்பிங் உரிமைகள் இதுவரை வேறெந்த தமிழ் படங்களும் தொடாத வகையில், மிகப்பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thalapathy vijay bigil, bigil special show

பிகில்

Bigil Business: இந்தாண்டு தீபாவளி வெளியீடாக இயக்குநர் அட்லீ இயக்கி,  ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் ’பிகில்’ திரைப்படம் வெளிவர இருக்கிறது. தளபதி விஜய் நடித்திருக்கும் இந்த 'பிகில்' திரைப்படம் தற்போது பரபரப்பான போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது.

இந்நிலையில் தற்போது இதன் வணிகப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக இதன் தெலுங்கு டப்பிங் உரிமைகள் இதுவரை வேறெந்த தமிழ் படங்களும் தொடாத வகையில், மிகப்பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளன. மற்ற மண்டலங்களிலும் ’பிகில்’ படத்தை அதிக தொகை கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில் இது தளபதியின் மற்ற படங்களை விட அதிக சாதனை படைக்கும் எனத் தெரிகிறது.

'பிகில்' படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து, நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக் மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வட சென்னையின் டான் மற்றும் அவரது மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் விஜய். இதில் மகன் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment