Advertisment

சொன்ன தேதிக்கு முன் கூட்டியே வெளியாகும் விஜய்யின் ‘பிகில்’!

Bigil Release: நான்கு நாட்கள் முன்னதாக அதாவது, அக்டோபர் 24-ம் தேதி பிகில் படத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம் தயாரிப்பு நிறுவனத்தினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigil Full Movie Download Tamilrockers, Bigil Tamil Movie, Bigil Tamil Movie Online Watch, பிகில், பிகில் ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ்

Bigil Full Movie Download Tamilrockers, Bigil Tamil Movie, Bigil Tamil Movie Online Watch, பிகில், பிகில் ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ்

Thalapathy Vijay: நடிகர் விஜய் தற்போது 'பிகில்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் அட்லீ இயக்கும் இந்தப் படத்தை, ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Advertisment

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படம் பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிறது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு, இந்தூஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் மற்றும் விவேக் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிகில் திரைப்படம் விஜய்யின் வெகுஜன ரசிகர்களுக்கும், சினிமா ஆர்வலர்களுக்கும் சிறந்த தீபாவளி விருந்தாக இருக்கும் என்றும், இதுவரை விஜய் தன் படங்களில் செய்திருக்கும் பல சாதனைகளை இப்படம் முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 27-ம் தேதி இப்படம் வெளியாகும் என முன்பே கூறப்பட்டது. ஆனால், அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், விஜய் ரசிகர்கள் பிகில் வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காரணத்தை மனதில் கொண்டும், நான்கு நாட்கள் முன்னதாக அதாவது, அக்டோபர் 24-ம் தேதி பிகில் படத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம் தயாரிப்பு நிறுவனத்தினர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

 

 

Atlee Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment