’முதல் தமிழ் திரைப்படம் இது தான்’: வரலாறு படைத்த விஜய்யின் ’பிகில்’!

Thalapathy Vijay’s bigil Movie: ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ போன்ற படங்களும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இது போன்ற சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டன.

Thalapathy Vijay, thalapathy, namal rajapaksa
தளபதி விஜய்

Thalapathy Vijay: இயக்குநர் அட்லீ இயக்கி, ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ’பிகில்’ திரைப்படம் தற்போது பரபரப்பான போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய்யுடன் இணைந்து நயன்தாரா,  இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி மற்றும் விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 27, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. அத்தகைய வகையில் பிகில் வெளியாவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில், மிகப்பெரும் வணிகத்தால் முந்தைய ரெக்கார்டுகளை சுக்கு நூறாக உடைத்தெறிய தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கிழக்கு இலங்கை மாகாணத்தில் உள்ள திரிகோணமலை, நெல்சன் திரையரங்கில் பெண்களுக்காக பிகில் சிறப்புக் காட்சியை விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். விஜய்யின் முந்தைய படங்களான ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ போன்ற படங்களும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இது போன்ற சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டன. ஆனால் வெளிநாட்டில் ஒரு தமிழ் படத்திற்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுவது இதுவே முதன்முறை.

பிக்பாஸ் இல்லத்தில் எனக்கு நடந்த கொடுமை: ஜாங்கிரி மதுமிதா பேட்டி

இதற்கிடையே பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும், ‘சிங்கப்பெண்ணே’ மற்றும் ‘வெறித்தனம்’ ஆகியப் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிப்பது குறிப்பிடத்தக்கது!

 

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thalapathy vijay bigil special ladies show sri lanka

Next Story
’தல 60 ஷூட்டிங்கா?’ வைரலாகும் அஜித்தின் புகைப்படம்!Thala 60 - Ajith Kumar photo shoot
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com