Advertisment

400 கோடியை கடந்த லியோ... விக்ரமை வீழத்துமா? 5-வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் 'தளபதி' விஜய்யின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும், இந்த ஆண்டின் ஐந்தாவது பெரிய இந்தியப் படமாகவும் உள்ளது.

author-image
WebDesk
New Update
Leo Vijay Box

லோகேஷ் கனகராஜின் லியோ படத்தின் ஸ்டில் ஒன்றில் விஜய்.

ஆங்கிலத்தில் படிக்க : Leo box office collection day 5: Thalapathy Vijay’s blockbuster eyes Rs 450 crore global gross on Dussehra, to overtake Kamal Haasan’s Vikram

Advertisment

தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், படம் வெளியாகி 5-வது நாளில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகெஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் லியோ. ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 19-ந் தேதி வெளியான இந்த படம் கலவையாக விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது லியோ படம் வெளியாகி 5-வது நாளான இன்று, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 2 புதிய சாதனைகளை படைத்துள்ளது லியோ திரைப்படம்.

இது குறித்து இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, லோகேஷ் கனகராஜ் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக வெளியான ஆக்ஷன்-த்ரில்லர்  படமான லியோ  இந்தியாவில் ரூ.200 கோடியையும், உலகளவில் ரூ.400 கோடியையும் கடந்ததுள்ள நிலையில், தசரா விடுமுறையான இன்று, படத்தின் வசூல் மேலும் வசூலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் லியோ படம் நேற்று (அக் 23) ரூ.35 கோடி வசூலித்தது, இதன் மூலம் படத்தின் மொத்த இந்திய வசூல் ரூ.216 கோடியாக உள்ளது. இப்படம் முதல் நாளில் ரூ.64 கோடி வசூலித்தது, இது தமிழ் மொழிப் படமொன்றின் இரண்டாவது பெரிய ஓபனிங் ஆகும், அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் ரூ.35 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.39 கோடியும், 4-வது நாளில் ரூ.41 கோடியும் நேற்று 35 கோடி வசூலித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் 26 கோடி வசூலித்துள்ள லியோ திரைப்படம் கேரள மாநிலத்திலும் நேற்று ரூ.7 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. கர்நாடகா ரூ 3 கோடி மற்றும் ஆந்திரப் பிரதேசம்/தெலுங்கானா பகுதிகள் ரூ 2.5 கோடி வசூலித்துள்ளது.  அதே நேரத்தில் இந்தியாவின் மற்ற பகுதிகள் ரூ 2.5 கோடியை வசூலித்துள்ளது. லியோ படத்தின் இந்தி பதிப்பு மல்டிபிளக்ஸ்களில் வெளியாகவில்லை என்றாலும், இப்போது 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

ஐந்தாவது நாளில் தினசரி தியேட்டர் ஆக்கிரமிப்பு இந்தியா முழுவதும் 72% ஆக இருந்தது, சென்னையில் 87% ஆக்கிரமிப்பு மற்றும் புதுச்சேரியில் கிட்டத்தட்ட 98% ஆக்கிரமிப்பு உள்ளது. லியோ ஐந்தாவது நாளில் 40% தெலுங்கு ஆக்கிரமிப்பையும், 12% இந்தி ஆக்கிரமிப்பையும் உறுதி செய்துள்ளது. தெலுங்கு மார்க்கெட்டில், உள்ளூர் படங்களான பகவந்த் கேசரி மற்றும் டைகர் நாகேஸ்வர ராவ் ஆகிய படங்களுக்கு போட்டியான லியோ வசூலித்து வருகிறது.

உலகளவில், லியோ ரூ. 400 கோடி வசூலை கடந்துவிட்டது, இது ரஜினிகாந்தின் ஜெயிலருக்குப் பிறகு இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய தமிழ் மொழித் திரைப்படமாக அமைகிறது. ஆனால் ஜெயிலர் படத்தின் மொத்த வசூல் சாதனையை லியோ படம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2023-ம் ஆண்டுடில் ஜெயிலர், கதர் 2, பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்களுக்குப் பிறகு, லியோ 2023 ஆம் ஆண்டின் ஐந்தாவது மிகப்பெரிய இந்தியத் திரைப்படமாகும்,

விஜயின் முந்தை படமாக வாரிசு படத்தின் மொத்த வசூல் சாதனையை லியோ முறியடித்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில், கமல்ஹாசன் நடித்த லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தை இந்தப் படம் முந்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment