ஆங்கிலத்தில் படிக்க : Leo box office collection day 14: Thalapathy Vijay’s blockbuster eyes Rs 600 cr mark, just Rs 55 crore short to Rajinikanth’s Jailer earning
தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 2 வாரங்களை நிறைவு செய்துள்ள நிலையில், 14-வது நாளில் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க லியோ படம் 55 கோடி பின்தங்கியுள்ளதாக கூறப்பட்டள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி மற்றும் கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 19-ந் தேதி வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது லியோ படம் 2 வாரங்களை நிறைவு செய்துள்ள நிலையில், இப்படம் விரைவில் ரூ.600 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் கடந்த ஓரிரு நாட்களாக சரிவைச் சந்தித்து வரும் லியோ திரைப்படம் புதன்கிழமை (நேற்று) ரூ. 3.50 கோடியை ஈட்டியது, இதன் மூலம் படத்தின் இந்திய பாக்ஸ்ஆபீஸ் வசூல் ரூ. 314.90 கோடி என்று இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் தெரிவித்துள்ளர். லியோ படம் தமிழகத்தில் 20.87 சதவீத ஆக்கிரமிப்பைக் கண்டது, பெரும்பாலான பார்வையாளர்கள் மாலைக் காட்சிகளை பார்க்க தியேட்டருக்கு வந்துள்ளனர்.
லியோ திரைப்படம் லோகேஷ் மற்றும் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது. உலக அளவில் இப்படம் ரூ.600 கோடியை கடக்க இன்னும் சில கோடிகள் குறைவாக உள்ளது. சாக்னில்க் (Sacnilk) அறிக்கையின் படி, 14 நாட்களுக்குப் பிறகு லியோ படத்தின் மொத்த மொத்த வசூல் 548.50 கோடி. ரஜினியின் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலை (ரூ. 604 கோடி) முந்த வெறும் 55.50 கோடி தேவை.
உலக பாக்ஸ் ஆபிஸில் ரஜினியின் ஜெயிலர் மற்றும் 2.0 படங்களைத் தொடர்ந்து லியோ மூன்றாவது பெரிய தமிழ்த் திரைப்படமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“